- பிறகு நான்
- பால்ராஜ்
- அன்னஞ்சி கிழக்குத் தெரு
- ஒத்தக்கடை சந்து
- திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலை
- பால்ராஜின்…
தேனி, ஜன.22: தேனி அருகே அன்னஞ்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்(60). விவசாயி. இவர் தனது வாழை தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் பணியை முடித்துக்கொண்டு டூவீலரில் திரும்பி வந்துகொண்டிருந்தார். திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலையில் ஒத்தக்கடை பாதையில் சென்றபோது, பின்னால் வந்த கார், பால்ராஜின் டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பால்ராஜ் படுகாயமடைந்தார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பால்ராஜின் மனைவி முருகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
