வத்தலக்குண்டு, ஜன.22: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு நடகோட்டை மலைப்பகுதியில் சோலார் மின்சாரம் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று காலை மலைப்பகுதியில் இருந்து வந்த சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்து விட்டது. மலைப்பாம்பை கண்டதும் பணியாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்ததும் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தனர்.
