×

நியூசியுடன் முதல் டி20 இந்திய அணி அசத்தல் வெற்றி

நாக்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 48 ரன் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசியது. இந்திய அணியின் துவக்க வீரர் சஞ்சு சாம்சன் 10 ரன்னிலும், பின் வந்த இஷான் கிஷண் 8 ரன்னிலும் வெளியேறினர்.

அதிரடியாக ரன் குவித்த அபிஷேக் சர்மா, 84 ரன் (35 பந்து, 8 சிக்சர், 5 பவுண்டரி) குவித்து அவுட்டானார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 32 ரன், ஹர்திக் பாண்ட்யா 25 ரன் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் ரிங்கு சிங் 20 பந்துகளில், 44 ரன்(3 சிக்சர், 4 பவுண்டரி) விளாசினார். 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 238 ரன் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ஜேகப் டபி, கைல் ஜேமிசன் தலா 2, கிறிஸ்டியன் கிளார்க், இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

239 என்ற கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 78 ரன், மார்க் 39 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே தலா 2 விக்கெட், அர்ஷ்தீப், ஹர்திக், அக்சார் படேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 48 ரன் வித்தியாசத்தில் வென்றது.

 

Tags : India ,T20I ,New Zealand ,Nagpur ,
× RELATED கலக்கலாய் ஆடிய சென், ஸ்ரீகாந்த்