×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஜெசிகா, மேடிசன் கீஸ் 3வது சுற்றுக்கு தகுதி

 

மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த 2வது சுற்றில் 6வது ரேங்க் அமெரிக்காவின் 31 வயது ஜெசிகா பெகுலா 6-0, 6-2 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தினார். நடப்பு சாம்பியனும், 19வது ரேங்க் வீராங்கனையுமான அமெரிக்காவின் 30 வயது மேடிசன் கீஸ் 6-1, 7-5 என சகநாட்டைச் சேர்ந்த ஆஷ்லின் க்ரூகரை வென்றார்.

ஸ்பெயினின் பவுலா படோசா 4-6, 4-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் 23 வயது ஒக்ஸானா செலக்மெதேவாவிடம் தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையரில் 5ம் நிலை வீரரான இத்தாலியின் லோரென்சோ முசெட்டி, 8வது ரேங்க் அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோரும் 2வது சுற்றில் வெற்றிபெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

 

Tags : Australian Open ,Jessica ,Madison Keys ,Melbourne ,Grand Slam ,Jessica Pegula ,United States ,
× RELATED முதல் டி.20யில் நியூசிலாந்தை வீழ்த்திய...