- சிந்து
- இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர்
- ஜகார்த்தா
- பிவி சிந்து
- ஜப்பான்
- இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்
- இந்தோனேஷியா
ஜகார்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்தோனேஷியாவில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை மனாமி சுய்ஸு மோதினர்.
போட்டியின் துவக்கம் முதல் இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷமாக மோதி புள்ளிகளை எடுத்தனர். நீண்ட நேரம் நடந்த முதல் செட்டை 22-20 என்ற புள்ளிக் கணக்கில் சிந்து போராடி கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சுதாரித்து சிறப்பாக ஆடிய சிந்து, 21-18 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதன் மூலம் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிவாகை சூடிய அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
