×

பறிக்காமல் செடிகளிலேயே விடப்பட்ட செண்டுமல்லி

போச்சம்பள்ளி, ஜன.22: போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், உரிய விலை கிடைக்காததால், செண்டு மல்லி பூக்களை பறிக்காமல் விவசாயிகள் செடியிலேயே விட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இங்கு செண்டுமல்லி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, செண்டுமல்லி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ செண்டுமல்லி ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. பூக்கள் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பறிப்பு கூலி கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து விவசாய சங்க தலைவர் வரதராஜன் கூறுகையில், ‘கடந்த காலத்தில் கிலோ செண்டுமல்லி ரூ.50 முதல் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், வரத்து அதிகரித்துள்ள நிலையில், தேவை குறைந்துள்ளதால் பூக்களின் விலை சரிந்துள்ளது. கேட்பதற்கு கூட யாரும் முன்வராமல், செண்டுமல்லி பூக்களை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டுள்ளதால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’ என்றார்.

Tags : Pochampally ,Krishnagiri district ,
× RELATED பாம்பாறு அணையில் இருந்து பிப்.13ம் தேதி தண்ணீர் திறப்பு