சாத்தான்குளம், ஜன. 22: சாத்தான்குளம் அருகேயுள்ள தாய்விளையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 19ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன. நயினார்பத்து இந்துஸ்தான் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடமும், தாய்விளை வின்னர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 2ம் இடமும், வாலத்தூர் ரஞ்சித் பாலா அணிக்கு 3ம் இடமும், வடகரை அணி 4ம் இடமும் பிடித்தன. முதலிடம் பிடித்த நயினார் பத்து அணிக்கு வைகுண்டம் தொகுதி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் வழங்கிய ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையை சாத்தான்குளம் வட்டார காங். தலைவர் பார்த்தசாரதி வழங்கினார். விழாவில் மாநில எஸ்சி எஸ்டி பிரிவு பொதுச் செயலாளர் ராஜ்குமார், எஸ்சி எஸ்டி பிரிவு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் முத்துராஜ், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகேசன், கிராம கமிட்டி தலைவர்கள் தோப்பூர் செல்வன், தாய்விளை சித்திரைவேல், ஊடகப்பிரிவு வட்டார தலைவர் முத்தரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
