×

வேதநதியில் கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம் வெள்ள நீரில் மாயம் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

பெரம்பலூர், ஜன.28: பாலையூர்- தொண்டப்பாடி இடையே வேத நதியில் கட்டப்ப ட்ட தற்காலிக தரைப்பா லம் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டதால் 5 கிராம ங்களுக்கு போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில் அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசலூர் பெரிய ஏரி, கரை பழுதாகி தண்ணீர் கசிந்து கசிந்து வந்த நிலையில் அதனை சரி செய்யாததால், நேற்று உடைப்பெடுத்தது. இதனால் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களை மூழ்கடித்துச் சென்ற வெள்ளநீர் வேதநதியில் கலந்து கரைபுரண்டு ஓடியது. இந்த தண்ணீர் வேப்பந்தட்டை வழியாக பாலையூர் - தொண்டப்பாடி கிரா மங்களுக்கு இடையே சென்றபோது, வேதநதியில் சுமார் ஒரு கோடியில் கட் டப்பட்டு வரும் மேம்பால கட்டுமான பணிகள் காரணமாக, 3 சிமெண்டு குழா ய்களை வைத்து தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தரைப் பாலத்தின் வழியாக சென்றது.

அளவுக்கு அதிகமான வெள்ளநீர் வேதநதியில் சென்றதால் எதிர்பாராத விதமாக தற்காலிக தரைப்பாலம் தவிடுபொடியாகி, கரைந்து காணாமல் போனது. சிமென்ட் குழாய்கள் மட்டுமே இப்போது எலும்பு கூடுபோல் கிடக்கிறது. இதனா ல் பாலையூர் தொண்டப்பாடி இடையே பாலத்தைக் கடந்து சென்றுவந்த பஸ், வாகனப் போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. குறிப்பாக அப்பாலத்தின் வழியாக பெரம்பலூரிலிருந்து வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, நெய்குப்பை, என்.புதூர், மரவநத்தம், வி.களத்தூர் ஆகிய கிராமங்களுக்கு செல்லுகின்ற போக்கு வரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வி.களத்தூர் டவுன் பஸ் பயணிக்கும் பிரதான வழித்தடம் என்பதாலும் இப்பகுதியினர் தாலுகா தலைநகர் வேப்பந்தட்டைக்கும், மாவட்ட தலைநகர் பெரம்பலூருக்கும் பல்வேறு அத்தியாவசிய பணிகள் காரணமாக செல்ல வேண் டி இருப்பதால், விரைந்து தரைப்பாலம் அமைக்கும் பணிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும் என 5 கிராம பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : ground bridge ,river ,Vedanta ,villages ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை