×

நேபாளத்தில் நீளம் தாண்டுதல் போட்டியில் சாதனை வேதாரண்யம் வாலிபருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

வேதாரண்யம், ஜன. 28: நேபாளத்தில் நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில் சாதனை படைத்த வேதாரண்யம் பகுதி வாலிபருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கு கிராமத்தை சேர்ந்த வாலிபர் வசிஷ்ட் விக்னேஷ். கடந்த 18ம் தேதி இன்டர்நேஷனல் யூத் ரூரல் கேம்ஸ்- ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நேபாளத்தில் நடந்த 7வது இந்தோ- நேபாள் யூத் ரூரல் கேம்ஸ் 2020ல் இந்தியா சார்பில் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றார். இந்நிலையில் நேற்று நேபாளத்திலிருந்து சொந்த ஊரான தேத்தாகுடி தெற்கு கிராமத்துக்கு வசிஷ்ட் விக்னேஷ் வந்தார். அப்போது அவருக்கு மாலை அணிவித்து மாட்டு வண்டியில் வீடு வரை 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக மக்கள் அழைத்து சென்றனர். மேலும் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். அப்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வெல்வதே லட்சியம் என்று வசிஷ்ட் விக்னேஷ் தெரிவித்தார்.

Tags : teenager ,Vedaranyam ,Nepal ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்