×

என்.ஜி.பி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.9 கோடி கல்வி உதவித்தொகை

கோவை, ஜன.21: கோவை டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் டாக்டர் என்ஜி.பி கலை, அறிவியல் கல்லூரி இணைந்து கல்லூரி வளாகத்தில் என்.ஜி.பி எம்பவர்மெண்ட் விருது விழாவை நடத்தியது. டாக்டர் என்.ஜி.பி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி பழனிசாமி, அறங்காவலர்கள் டாக்டர் அருண் பழனிசாமி மற்றும் மதுரா பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சரவணன் வரவேற்றார். டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூயின் முதல்வர் டாக்டர் பிரபா நடப்பு கல்வியாண்டில் வழங்கப்பட்ட உதவித்தொகைகளின் புள்ளி விவரங்களை உள்ளடக்கிய குறுந்தகவல் அறிக்கையை வழங்கினார்.

விழாவிற்கு தலைமை விருந்தினராக நாஸ்காம் இயக்குநர், சென்னை மாற்றம் அறக்கட்டளையின் இணை நிறுவனர் உதய சங்கர் கலந்து கொண்டார்.2025-2026ம் கல்வியாண்டிற்காக கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கிய 4,530 மாணவர்களுக்கு மொத்தமாக ரூ.9 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டன. இதில் தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ்வரன், கல்விசார் இயக்குனர் முத்துசாமி, மற்றும் தலைமை இயக்க அதிகாரி நடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : NGP ,Coimbatore ,Dr. ,NGP College of Technology ,NGP College of Arts and Science ,NGP Empowerment Award Ceremony ,NGP Research and Education Foundation ,Nalla… ,
× RELATED திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற களப்பணியாற்றுவோம்