×

வேளாண் பல்கலை.யில் காய்கறி, பழங்கள் ஏற்றுமதி பயிற்சி

கோவை, ஜன. 21: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த பயிற்சி இரண்டு நடக்க உள்ளது. இந்த பயிற்சியில், உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர், இறுதியாண்டு பட்டதாரி மாணவ, மாணவிகள், இதர பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பங்குபெறலாம். இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக வளாகத்தில் வரும் பிப்ரவரி 3,4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.3,540 ஆகும். பயிற்சிக்கு குறைந்த எண்ணிகையிலான இடங்களே உள்ள நிலையில், பயிற்சியில் சேர business@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும், 0422-6611310 மற்றும் 8220661228 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Agricultural University ,Coimbatore ,Directorate of Agribusiness Development ,Tamil Nadu Agricultural University ,
× RELATED என்.ஜி.பி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.9 கோடி கல்வி உதவித்தொகை