- ஏற்றுமதி முன்னணி தமிழ்நாடு
- தமிழக மாநாடு
- Stallin
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஏற்றுமதி
- -முன்னணி தமிழர்கள்
சென்னை: ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஏற்றுமதி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்திய சுதந்திர தின விழாவின் 75வது வருடத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து ‘‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்” நிகழ்வினை நடத்துகின்றன. அந்தவகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.45 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் “ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு” தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை துவக்கி வைத்து பேருரையாற்றினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை” மற்றும் “குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு” ஆகியவற்றையும் வெளியிட்டார். பின்னர், பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,210 கோடி மதிப்பிலான 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.24 தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 41,695 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. 21 ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்களின் கண்காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ஏற்றுமதி மேம்பாட்டு கண்காட்சி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.இந்த விழாவில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, ஒன்றிய அரசின் வர்த்தக துறை கூடுதல் செயலாளர் சஞ்சய் சத்தா, தமிழக அரசின் தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். …
The post ‘ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு’ மாநாட்டில் 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்து : 41,695 பேருக்கு வேலை வாய்ப்பு!! appeared first on Dinakaran.