கரூர்: குளித்தலையை அடுத்த லாலாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஸ்கூட்டி மீது தனியார் பேருந்து மோதிய கோர விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தப்பிய நிலையில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
