×

சாதனைகளை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: சாதனைகளை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இரவு – பகல் பார்க்காமல் தேர்தல் வெற்றிக்காக ஓய்வு இல்லாமல் உடன்பிறப்புகள் உழைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் விடாமல் எல்லாரும் நம் திட்டங்களால் பயனடைய வேண்டும் என பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்த திராவிட மாடலின் சாதனைகளை, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வார்கள். தேவையில்லாத கருத்துகளை பேசி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அவர்கள் நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகக் கூடாது.

கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை நான் பார்த்துக் கொள்கிறேன். 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100% களப் பணியாற்ற வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தின் ஆளுநர் உரையில் நாம் கடந்த 5 ஆண்டுகளில் செய்த திட்டங்களை தலைப்புச் செய்திகளாக சொல்லியிருக்கிறோம். இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றி இருப்பதால்தான், எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகளே திண்டாடுகிறார்கள்.

நல்லா கேட்டுக்கோங்க… தேர்தல் நெருங்கிடுச்சு, இனி நம் சிந்தனை – செயல் எல்லாத்துலயும் வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை மக்களின் பங்களிப்போடு மக்களின் தேர்தல் அறிக்கையாக வெளிவரும் என்று கூறினார்.

Tags : Thimugvinar ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,ANNA ENTAWALAYAM ,PRESIDENT ,THE ARTIST'S ARENA ,MINISTER ,MU. K. ,Stalin ,
× RELATED திருச்சியில் மார்ச் 8 ஆம் தேதி திமுக...