×

கள்ளச்சாராயம், மது விற்ற 307 பேர் கைது

நாமக்கல், ஜன.28: நாமக்கல் மாவட்டத்தில் திருட்டுதனமாக கள்ளச்சாராயம், மது விற்பனை செய்த 307 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தின் பல இடங்களில் திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம், டாஸ்மாக் மதுபானங்கள், கள் விற்பனை அதிகளவில் நடந்து வந்தது. டாஸ்மாக் பார்கள், சந்துக்கடைகள் என்ற பெயரில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்பட்டது. இதை உள்ளூர் மற்றும் மதுவிலக்கு போலீசார் கண்டும், காணாமல் இருந்தனர். இதை தடுக்க, மாவட்ட எஸ்பி சக்திகணேசன் கடந்த வாரம், திடீரென ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் அடங்கிய தனிப்படையை அமைத்தார்.

தனிப்படை போலீசார் கடந்த ஒரு வாரமாக, கள்ளச்சாராயம், மது விற்பனை செய்தவர்களை கண்காணித்து நேற்றுவரை 307 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராய வேட்டையில் சிறப்பாக பணியாற்றிய எஸ்ஐக்கள் தங்கம், மாணிக்கம், ராஜேந்திரன் ஆகியோரை எஸ்பி சக்திகணேசன் பாராட்டினார். சாராயம், வெளிமாநில மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்யும் நபர்கள் மீது, குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரித்துள்ளார்.

Tags :
× RELATED ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்