×

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை சேர்க்கும் பாஜ முயற்சி தப்பு இல்லை: வீராப்பு செல்லூர் ராஜூ அந்தர் பல்டி

மதுரை: அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை சேர்க்கும் பாஜ முயற்சி தப்பு இல்லை என்று செல்லூர் ராஜூ தெரிவித்து உள்ளார். மதுரையில் அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: கடந்த தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் ரூ.1,500 மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாரையும் பின்பற்றி செய்யப்படவில்லை. ஆண்களில் பாவப்பட்ட மக்கள் உள்ளனர். அதனால் தான் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களில் வயதானவர்கள், பாவப்பட்ட மக்கள் என இருக்க மாட்டார்களா? வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

அவர்களுக்காகத் தான் இலவச பேருந்து திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி தர்மத்தின் அடிப்படையிலேயே, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்காக பாஜ முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதில் தப்பு ஒன்றும் இல்லை. ஓபிஎஸ்சை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார். நாங்க யாருக்கும் அடிமை இல்லை, தன்மானம் மிக்கவர்கள், நாங்கள் யாருக்கும் அடிபணியமாட்டோம் என்று சில நாட்களுக்கு முன் தில்லாக பேட்டியளித்த செல்லூர் ராஜூ நேற்று அதிமுகவில் பிரிந்தவர்களை சேர்க்க பாஜ முயற்சிப்பது ஒன்றும் தவறில்லை என்று அந்தர் பல்டி அடித்துள்ளார் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.

Tags : Atymukh ,Veerappu Cellur ,Raju Ander Baldi ,MADURAI ,CELLUR RAJU ,ATEMUGAV ,Madura ,Adimuka ,Maji ,Minister ,
× RELATED சாதனைகளை மக்களிடையே கொண்டு சேர்க்க...