- கோயம்புத்தூர்
- சிஆர்பிஎஃப்
- மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை
- தோப்பம்பட்டி
- துடியலூர்
- வடக்கு மாநிலங்கள்
கோவை, ஜன. 20: கோவை துடியலூர் அடுத்த தொப்பம் பட்டியில் சிஆர்பிஎப் (மத்திய தொழிற் பாதுகாப்பு படை) முகாம் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த சில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அதில், மகாராஷ்டிரா அஞ்சலி நகரை சேர்ந்த அமோல் (33) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி வளாகத்தில் உள்ள படிக்கட்டு கம்பியில் அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.இதனை பார்த்த சக தொழிலாளிகள் சிஆர்பிஎப் முகாம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனே 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து சோதனை செய்தபோது, அமோல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
