சென்னை: தமிழகத்தில் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மும்முரமாக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது. இதற்கிடையில் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் மாவட்ட தலைவர்களை மாற்றினால் தேர்தல் பணிகள் பாதிக்கும் என மூத்த தலைவர்கள் டெல்லி தலைமைக்கு அறிவுறுத்தினர். இந்த நிலையில், நேற்று இரவு 71 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்களை நியமித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செல்வபெருந்தகைக்கு எதிராக செயல்பட்ட பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்கள் விவரம்: ஆவடி – அப்துல் அமீத், மத்திய சென்னை கிழக்கு – கராத்தே செல்வம், மத்திய சென்னை மேற்கு – எம்.எம்.டி.ஏ.கே.கோபி, வடசென்னை கிழக்கு – மாதரம்மா கனி, வடசென்னை மேற்கு – டில்லிபாபு, தென் சென்னை மத்திய – ஜோதி பொன்னம்பலம், தென் சென்னை கிழக்கு – விஜய் சேகர், தென் சென்னை மேற்கு – திலகர், செங்கல்பட்டு வடக்கு – செந்தில் குமார், செங்கல்பட்டு தெற்கு – பிரபு, காஞ்சிபுரம் – அருள் ராஜ், திருவள்ளூர் வடக்கு – சசிகுமார், திருவள்ளூர் தெற்கு – கங்கை குமார், உள்ளிட்ட 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
