×

அடிலெய்டு டென்னிஸ்: ரஷ்ய வீராங்கனை மிர்ரா சாம்பியன்

அடிலெய்டு,: அடிலெய்டில் நடந்த இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரிவா சாம்பியன் பட்டம் வென்றார். அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரிவா, கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகோ உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய மிர்ரா ஆண்ட்ரிவா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

Tags : Adelaide ,Tennis ,Mirra ,Russia ,Mirra Andreeva ,Adelaide International Tennis Series ,Australia ,Victoria… ,
× RELATED 4வது டி20 போட்டி நியூசி அணி வென்றது