திண்டுக்கல் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விக்னேஸ்வரனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். சவேரியார் பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி விக்னேஸ்வரனை பிடிக்க சென்றபோது, ரவுடி அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முற்படும்போது போலீசார் சுட்டுப் பிடித்தனர். ரவுடி விக்னேஸ்வரன் தப்பி ஓடும்போது போலீசார் சுட்டதில் வலது காலில் காயமடைந்தார். காயமடைந்த விக்னேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ரவுடி விக்னேஸ்வரன் மீது 3 கொலை வழக்கு உள்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
