- Icourt
- பெடரல் திரைப்பட தணிக்கை
- ஜனநாயக
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- மத்திய திரைப்பட தணிக்கை வா
- மணி.
- பொங்கல் திருவிழா
சென்னை: ஜனநாயகன் படத்துக்கு U/A சான்று வழங்குமாறு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தயாரித்து ஹெச்.வினோத் இயக்கி இந்தத் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன.9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதையடுத்து ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. டிச.19ல் படம் பார்த்த சென்சார் குழு சில காட்சிகளை நீக்கவும் சில வசனங்களை மியூட் செய்யவும் கூறி இருந்தது. தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதம் ஆனதை அடுத்து நீதிமன்றத்தை அணுகியது படக்குழு.
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின்பு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜனநாயகன் படத்தை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். மேலும் ஜனநாயகன் படத்திற்கு U/A சான்று வழங்குமாறு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
