×

கஞ்சா வியாபாரிகள் கைது

ராஜபாளையம், ஜன.9: ராஜபாளையத்தில் பள்ளி அருகே கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் சத்திரப்பட்டி சாலையில் உள்ள பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் பாரதி நகர் பகுதியை சேர்ந்த பழனி மகன் செல்வ மீனாட்சி(23) சின்ன சுரக்காய்பட்டியை சேர்ந்த பாலு மகன் அஜித்(24) என்பதும் இருவரும் கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் அஜித் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Rajapaliam ,Rajapalayam ,Rajapaliam South Police ,Pro-Inspector ,Richam ,Sathrapati Road ,
× RELATED விவசாயிகள் பயிற்சி முகாம்