- வல்லம்
- வின்சென்ட் குமார்
- மேட்டுத்தெரு, ரெட்டிப்பாளையம், தஞ்சாவூர்
- சோழ நகரம்
- தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை
வல்லம், ஜன.9: தஞ்சை ரெட்டிபாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் குமார்(38). பொக்லைன் பழுதுபார்க்கும் மெக்கானிக். இவர் தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோழா சிட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து பொக்லைன் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இங்கு உபரகணங்கள் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தார்.
கடந்த 4ம் தேதி இரவு வேலைக்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பொக்லைன் இயந்திர உதிரிபாகங்கள், லேப்டாப், டேப், உபகரணங்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வல்லம் போலீசில் வின்சென்ட் குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
