×

செங்கோட்டையனுக்கு காமெடி சென்ஸ் அதிகம்: அமைச்சர் சாமிநாதன் செம கலாய்

திருப்பூர்: திருப்பூரில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: பாமக ஏற்கனவே 2 பிரிவாக உள்ளது. இதில் அன்புமணி ராமதாஸ் உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. ஆனால் பாமகவை ஆரம்பித்து கட்சியை கொண்டு வந்தது நான்தான் என ராமதாஸ் சொல்கிறார். எனவே இதில் அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஜனநாயகன் பட தணிக்கை சான்றிதழை பொறுத்தவரை மாநில அரசுக்கும் தணிக்கை சான்றிதழுக்கும், எந்த ஒரு தொடர்பும் இல்லை. அது ஒன்றிய அரசின் பொறுப்பு.

சமீபகாலமாக செங்கோட்டையனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகரித்து வருகிறது. திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார். முதலில் ரூ.100 கோடி அபராதமும், 6 ஆண்டு காலம் சிறை தண்டனை நீதிமன்றம் அவர்களது தலைவி ஜெயலலிதாவுக்கு விதித்தது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்லட்டும். எங்கள் மீதான புகாரினை நாங்கள் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sengkottiyan ,Minister ,Saminathan Sema Kalai ,Tiruppur ,Fr. ,SAMINATHAN TOLD ,Anbumani ,Ramadas ,
× RELATED ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஓபிஎஸ், டிடிவி...