×

பால் பவுடரில் நச்சுப் பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பால் பவுடர் ஃபார்முலாவை திரும்பப் பெறுவதாக நெஸ்லே அறிவிப்பு

 

சுவிட்சர்லாந்து: பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் நெஸ்லே நிறுவனம் தனது குழந்தை உணவுப் பவுடர் ஃபார்முலாவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. “Cereulide” என்ற நச்சுப் பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கடந்த டிசம்பர் மாதம் முதல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் நெஸ்லே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பால் பொருள்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு மூலப்பொருள் தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை.

பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் பொருட்களின் முதன்மையாக கருதப்படுவது நெஸ்லே நிறுவனத்தின் பொருட்கள் தான். இவை குழந்தைக்கான ஃபார்முலா பால் என்பது 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படும் ஒரு சத்தான உணவாகும்.

இந்த நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் நெஸ்லே நிறுவனம் தனது குழந்தை உணவுப் பவுடர் ஃபார்முலாவை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. பால் பொருள்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு மூலப்பொருள் தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் அந்த பால் பொருள்களில் குமட்டல், வாந்தி, செரிமானச் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் முதல் பால் பொருளில் நச்சுப் பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், குழந்தை உணவுப் பவுடர் ஃபார்முலாவை திரும்பப்பெறும் நடவடிக்கையை நெஸ்லே மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பால் பொருள்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அவற்றை திருப்பி அளித்து முழுமையான பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதற்கான வழிகாட்டுதல்களை நெஸ்லே வழங்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nestle ,Switzerland ,Nestlé ,France ,Germany ,
× RELATED 2030ம் ஆண்டிற்கான தொலைநோக்கு...