×

சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.400 குறைந்தது; வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்தது

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,02,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகின்றன. மாதந்தோறும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தங்கம், வெள்ளி விலை கடந்தாண்டு இறுதியில் அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 27ம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800க்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை தொட்டது.

அதன் பிறகு தங்கம் விலை குறைந்தது. அதாவது கடந்த 29ம் தேதி முதல் தொடர்சியாக 4 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,280 வரை குறைந்தது. கடந்த 2ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. 2ம் தேதி பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 640க்கு விற்பனையானது. இதனையடுத்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கத்தின் விலையானது வாரத்தின் தொடக்க நாளான கடந்த 5ம் தேதி, சவரனுக்கு ரூ. 1,02,080க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் தினம் பவுனுக்கு ரூ.560 உயர்ந்து சவரன் ரூ.1,02,640க்கும் விற்பனை செய்யப்பட்டன.

அதேபோல், வெள்ளி விலையும் ஒரு கிராமிற்கு ரூ. 5 உயர்ந்து ரூ.271க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து ரூ.2.71 லட்சத்திற்கும் விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ. 1,02,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வெள்ளி சவரனுக்கு வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283க்கும், கிலோவுக்கு மட்டுமே ரூ.12,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,83,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,02,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 ஒரு கிராம் ரூ.12,750க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.272க்கும் கிலோவுக்கு ரூ.5000 குறைந்து விற்பனை ஆகிறது.

Tags : Chennai ,
× RELATED யாருடன் தேமுதிக கூட்டணி என்று முடிவு...