- எட்டயபுரம்
- Markandeyan
- சட்டமன்ற உறுப்பினர்
- பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி
எட்டயபுரம், ஜன. 7: எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் 100 மாணவியருக்கு மடிக்கணினிகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார். எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 100 மாணவியருக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ கலந்து கொண்டு 100 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பேபி லதா, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீதக்கண்ணன், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி, கவுன்சிலர் குமார், வார்டு செயலாளர்கள் ராம்குமார், மாரிக்கண்ணன், அருள்சுந்தர், நகர மகளிரணி முருகலட்சுமி, இளைஞரணி அய்யனார் ராஜா, மதன், சூர்யா உள்பட ஆசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.
