கவுகாத்தி: அசாமில் நேற்று காலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிரம்மபுத்திராவின் தெற்குகரையில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் 50கி.மீ ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. நிலநடுக்கத்தின் காரணமாக மோரிகன் மாவட்டத்தில் உள்ள வீடுகளில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. பயத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடிய சிலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 80வயது மூதாட்டி வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தபோது கீழே விழுந்து தலையில் காயமேற்பட்டுள்ளது. மத்திய-மேற்கு அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
