×

பாதுகாப்பு வழங்கக் கோரி காதல் திருமண தம்பதி மனு பெற்றோரிடம் இருந்து எஸ்பி அலுவலகத்தில் வழங்கினர்

மதுரை, ஜன. 6: மதுரை, கீழமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரண்யா(23). இவர், தனது காதல் கணவருடன் மதுரை, அழகர்கோயில் சாலையில் உள்ள எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று வந்தார். பின்னர் அவர் அளித்த மனுவில் கூறப்பட்டு உளள்தாவது: நானும், இதே பகுதியை சேர்ந்த வாசகன்(25) என்பவரும், கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், எங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முயற்சி செய்தனர். இதனால் நான் வீட்டில் இருந்து வெளியேறி, அழகர்கோயிலில் இந்து முறைப்படி எனது காதலர் வாசகனை திருமணம் செய்து கொண்டேன். இதையடுத்து எனக்கும், கணவருக்கும் எனது பெற்றோர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். இந்த மனு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : SP ,Madurai ,Saranya ,Keelamathur ,Alagarkoil Road, Madurai ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி