×

2வது நாளாக நேற்றும் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

 

செங்கல்பட்டு: அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி கடந்த 2 நாட்களாக படையெடுத்தனர். இதனால் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிங்கபெருமாள்கோவில் முதல் திருத்தேரி வரை ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் தவித்தன. நேற்றுமுன்தினத்தை தொடர்ந்து நேற்றும் இரண்டாவது நாளாக சென்னை நோக்கி படையெடுத்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

Tags : GST Road ,Chengalpattu ,Chennai ,Singaperumalkoil ,Chengalpattu.… ,
× RELATED பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு...