×

தோகைமலை அருகே மது விற்ற பெண் கைது

தோகைமலை, ஜன, 5: கரூர் மாவட்டம் தோகைமலை காவல்சரகம் கொசூர் ஊராட்சி கம்பளியாம்பட்டியை சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மனைவி ராசம்மாள்(65). இவர் தனது வீட்டின் அருகே சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்து உள்ளார். இது குறித்து இப்பகுதியினர் தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர்.

தகவல் அறிந்த தோகைமலை போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்து உள்ளனர். அப்போது ராசம்மாள் விற்பனை செய்வதற்காக மதுபானங்களை பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து ராசம்மாள் பதுக்கி வைத்திருந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ராசம்மாள் மீது வழங்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

 

Tags : Thogaimalai ,Rasammal ,Palaniappan ,Kambaliyampatti ,Kosur panchayat ,Karur district ,Thogaimalai… ,
× RELATED கிருஷ்ணராயபுரத்தில் ஈப்பு ஓட்டுநர் பணிக்கு நேர்காணல்