அரூர், ஜன.5: மொரப்பூர் பேருந்து நிலையம் முதல் காவல் நிலையம் வழியாக, புதியதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் நடைபெற்றது. மொரப்பூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் செங்கண்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன், முன்னாள் பிஏசிபி தலைவர் முல்லை கோபால், திருமால், அண்ணாதுரை, ஜெமினி, லோகேஷ், ஆனந்த், வெங்கடேசன், சின்னபையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
