×

531வது மலைச்சாரல் கவியரங்கம்

 

ஊட்டி,ஜன.5: நீலகிரி மாவட்ட தமிழ் கவிஞர்கள் சங்கம் சார்பில் மாதந்தோறும் ஊட்டியில் கவியரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக புத்தாண்டின் துவக்கமாக 531வது மலைச்சாரல் கவியரங்கம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடந்தது.
நீலகிரி மாவட்ட மலைச்சாரல் 531வது மாதாந்திர புத்தாண்டு கவியரங்கம் தலைவர் பெள்ளி முன்னிலை வகித்தார். செயலாளர் பிரபு தலைமை வகித்தார்.இக்கவியரங்கில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கடந்த காலங்களில் வெளியிட்டது போல் புதிய கவிதை நூல்கள் வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. கவிஞர்கள் ஜனார்தனன், சமன்குமார், ரமேஷ், அமுதவல்லி, சுந்தரபாண்டியன், கிருஷ்ணராஜ், மாரியப்பன், பீனா, மணிஅர்ஜுணன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசித்தனர். முடிவில் கவிஞர் மகேந்திரன் நன்றி கூறினார்.

Tags : 531st Mountain Poetry Festival ,Ooty ,Nilgiris District Tamil Poets Association ,Ooty Government Botanical Garden ,531st ,
× RELATED ஹைபீல்டு சாலையில் சாலையோரத்தில் வெட்டப்பட்ட மரங்களை அகற்ற கோரிக்கை