×

எடப்பாடி புறக்கணிப்பு அமித்ஷாவுடன் எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு

 

திருச்சி: புதுக்கோட்டையில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு இரவு 8 மணிக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தார். முன்னதாக திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவை சேர்ந்த யாரும் வரவேற்கவில்லை. பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

இந்த சூழலில், ஓட்டலில் நேற்றிரவு பாஜ நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி தொடர்பாக பாஜ நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்திய நிலையில், அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று இரவு 9.45 மணியளவில் திடீரென சந்தித்து பேசினார். தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதிகள் எங்களுக்கு வேண்டும் என கேட்டு ஒரு லிஸ்ட் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

 

Tags : S.P. Velumani ,Amit Shah ,Trichy ,Tamil Nadu ,BJP ,Nayinar Nagendran ,Pudukkottai ,Union Home Minister ,Trichy Collector's Office Road ,Trichy… ,
× RELATED கடையல் அருகே பரபரப்பு; கோதையாற்றில்...