விக்கிரவாண்டி: அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை நோக்கி வருவதால், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்சி – சென்னை சாலையில் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுப்பிவைக்கப்படுகிறது.
