×

இரட்டை கொலையில் திருப்பம்; 2 மூதாட்டிகளை பலாத்காரம் செய்து கொன்றது அம்பலம்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

சேலம்: இளம்பிள்ளை அருகே இரட்டை கொலையில் கைதானவர், 2 மூதாட்டிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது அம்பலமாகியுள்ளது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை தூதனூர், காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் மூதாட்டிகள் பெரியம்மாள் (75), பாவாயி (70) ஆகியோர், கடந்த நவம்பர் 3ம் தேதி மாயமாகினர். இதனிடையே, மறுநாள் (4ம் தேதி) காலை அதே பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் பெரியம்மாள் சடலமாக மிதந்தார். தகவலின் பேரில், அங்கு விரைந்த போலீசார், பெரியம்மாளின் சடலத்தை மீட்டனர்.

சிறிது நேரத்தில், பாவாயியின் சடலமும் மிதந்தது. இருவரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கருப்பூர் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த அய்யனார் (55) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. தலைமறைவாக இருந்த அவரை, சங்ககிரி அருகே உள்ள ஒருக்காமலை பகுதியில் கடந்த நவம்பர் 7ம் தேதி, போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, மகுடஞ்சாவடி எஸ்ஐ கண்ணன் என்பவரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற அய்யனாரை, துப்பாக்கியால் போலீசார் சுட்டு பிடித்தனர்.

விசாரணையில், அவர் 2 மூதாட்டிகளையும் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், அவருக்கு உதவியாக இருந்த பூபதி(52) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அய்யனார் மீது, ஏற்கனவே ஓமலூர் அருகே ஆடு மேய்க்கும் மூதாட்டியை நகைக்காக கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் வழக்குகள் இருந்ததால், அவரை போலீசார் குண்டாசில் கைது செய்தனர்.

இந்நிலையில், பெரியம்மாள், பாவாயி ஆகியோரின் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில், மகுடஞ்சாவடி போலீசார், நேற்று முன்தினம் அய்யனார் மற்றும் பூபதியை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில், 2 மூதாட்டிகளையும் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்ததை அய்யனார் ஒப்புக்கொண்டார். மூதாட்டி பெரியம்மாளை பலாத்காரம் செய்த போது, சத்தம் கேட்டு வந்து பார்த்த பாவாயி, ஊருக்குள் சொல்லி விடுவார் என்ற பயத்தில், அவரையும் தாக்கி பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இருவரது உடல்களையும் தூக்கி குட்டையில் வீசுவதற்கு பூபதி உதவி செய்துள்ளார். விசாரணைக்கு பின்னர், நேற்று சங்ககிரி நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

Tags : Salem ,Salem District Ilampillai ,Thuthanur ,Goat ,Kattualavu ,Peryammal ,Bhavai ,
× RELATED இந்திய பெருங்கடலில் காற்றழுத்த...