சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றம்

சத்தியமங்கலம், ஜன.24: சத்தியமங்கலம் அடுத்துள்ள எரங்காட்டூர் பகுதியிலிருந்து முடுக்கன்துறை வரை செல்லும் சாலை விரிவாக்கம் செய்து தார் சாலை அமைக்கும் பணி டெண்டர் விடப்பட்டு பல மாதங்களாகியும் பணிகள் நடைபெறாமல் காலதாமதமானது. பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தில் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து சாலையை அகலப்படுத்த பின்பு சாலை அமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்த நிலையில் நேற்று அப்பகுதியில் சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளின் முன்பகுதி இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.  இந்த பணியின் போது தாளவாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்தில் முகாமிட்டு சாலையை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றப்பட்ட பின்னர் சாலையை அகலப்படுத்தி புதிய தார்சாலை அமைக்கும் பணி விரைந்து மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>