சென்னை: சென்னை புழல் சிறையில் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார். ஜாமினில் எடுப்பது தொடர்பாக பொன்னை பாலு, மணிவண்ணன் மற்றும் புதார் அப்பு இடையே மோதல் ஏற்பட்டது. சண்டையை விலக்கிவிட்ட உதவி சிறை அலுவலர் திருநாவுக்கரசு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மோதலில் ஈடுபட்டவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
