“ஸஹா சப்தபதா பவ ஸஹா யௌ சப்தபதா பபூவ ஸக்யந்தே’’
என்று அந்த மந்திரம் வரும்.
சக பாவனையோடு நாம் இணைந்து வாழ்வோம் என்று அக்னிக்கு முன்பாக பெரியோர்க்கு முன்பாக மணமகன் மணமகளிடம் உறுதிமொழி கூறுவதாக இந்த மந்திரம் அமைந்திருக்கிறது. அடுத்து, நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம். செய்ய வேண்டியவைகளை கலந்து ஆலோசித்துச் செய்வோம் என்று வருகின்றது. கணவன் தன் விருப்பப்படி ஒரு காரியத்தை செய்வதாக இந்த மந்திரம் வரவில்லை. ராமாயணத்திலே ராமனிடம் காட்டில் வசிக்கும் தவ ச்ரேஷ்டர்கள் தாங்கள் அரக்கர்களால் பல்வேறு வகையிலும் தாக்கப்பட்டு துன்பப்படுவதைக் காட்டுகின்றனர். அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவதாக ராமன் உறுதிமொழி கொடுக்கின்றார். இதைப்பற்றி சீதையிடம் கலந்து ஆலோசிக்கின்றார். சப்தபதி மந்திரம் இப்படி ஆலோசித்து செய்ய வேண்டியவைகளை நாம் கலந்து செய்வோம் என்று வருகின்றது. அதற்கடுத்த மந்திரம் நாம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டவர்களாக இருப்போம்.
அன்பினால் பெருமையடைந்தவர்களாக இருப்போம். நல்ல உள்ளங்களாலே இருவரும் சேர்ந்து வாழ்வோம். உணவு, உடை, மற்ற சந்தோஷங்கள் எல்லாவற்றையும் சேர்ந்தே பகிர்ந்து கொண்டு அனுபவிப்போம். செய்ய வேண்டிய இல்லற தர்மங்களை இணைந்து செய்வோம் என்று வருகிறது. இதற்குப் பிறகு, இந்த மந்திரம் இன்னும் ஆழமாகப் போகின்றது. நீ, ரிக் வேதமாக இருக்கிறார். நான் சாம வேதமாக இருக்கிறேன். நான் ஆகாயமாக இருக்கின்றேன். நீ பூமியாக இருக்கின்றாய் (கண்ணானால் நான் இமையாவேன்… என்ற பழைய திரைப்படப்பாடலையும் நினைத்துக் கொண்டால் நன்கு புரியும்) இரண்டும் ஒன்றுக் கொன்று இணைந்தது என்பதற்காக இது வருகின்றது. நான் வீரியமாகிய சுக்லத்தை தருபவனாக இருக்கின்றேன். நீ அதைத் தரிப்பவளாக இருக்கின்றாய் என்ன பொருள் என்று சொன்னால், இருவர் சம்மந்தம் சுக்ல சுரோநித சம்பந்தமாக மாறி நீரும் பயிரும் போலே இணையப் பெற்று நல்ல மக்களை இந்த சமூகத்திற்கு பெற்றுத் தருகின்றது. நான் மனதாக இருக்கின்றேன். அதனால் நான் நினைக்கின்றேன். நீ என் மனதில் உள்ளவற்றை பேசுபவளாக- தெளிவு படுத்துபவளாக – இருக்கின்றார்.
மனோ ஹமஸ்மி வாக்த்வம் ஸாமாஹமஸ்மி…. என்று மந்திரம்.
நான் மனம். நீ வாக்கு.
நான் நினைப்பதை நீ பேசுகின்றார்.
நான் சாம வேதம். நீ ருக் வேதம்.
சாம வேதம் என்பது ரிக் வேதத்தினுடைய இசை வடிவம் என்று சொல்லுவார்கள்.
அதாவது மணமகன் பாடல் என்றால் அந்த பாட்டின் இசை மணமகள். இப்படி உயர்ந்த மந்திரங்களை புரோகிதர்கள் சொல்ல அதனை மணமகன் அக்னி சாட்சியாக மணமகளின் கையைப் பிடித்துக்கொண்டு ஏழு அடி நடந்து சொல்கிறார். (இது தவிர பிரதான சப்தபதி ஏழு மந்திரங்கள் உண்டு)
1. ஏகமிஷே விஷ்ணுஸ் த்வாந்வேது (முதலாவது அடியில் அன்னம் குறைவின்றி அளிக்க மகாவிஷ்ணு
பின்தொடர்ந்து வருகின்றார்.)
2. த்ேவ ஊர்ஜே விஷ்ணுஸ் த்வாந்வே து (புஷ்டியோடு வாழ வேண்டும். அதற்கு உன்னோடு விஷ்ணு இருக்கிறார்.)
3. த்ரீணீ வ்ரதாய விஷ்ணுஸ் த்வாந்வே து (விரத அனுஷ்டானம் நடைபெற வேண்டும் அதற்கு விஷ்ணு துணை புரிகிறார்.)
4. சத்வாரி மயோ பவாய விஷ்ணுஸ் த்வாந்வேது (நீ சுகம் பெற வேண்டும். அதற்கு விஷ்ணு உன் நான்காவது அடியில் துணை புரிகிறார்.)
5. பஞ்ச பசுப்யஹ விஷ்ணுஸ் த்வாந்வேது (பசு போன்ற செல்வங்கள்
வே ண்டும்.)
6. ஷட்ரு துப்யஹ விஷ்ணுஸ் த்வாந்வேது (பருவகாலங்கள் அனுகூலம் செய்ய வேண்டும்.)
7. ஸப்த ஸப்தப்யோ ஹோத்ராப்யோ விஷ்ணுஸ் த்வாந்வேது (ஹோமம் குறையின்றி நடைபெற ேவண்டும்.)
இப்படி ஒவ்வொரு அடியிலும் விஷ்ணு துணை புரிந்து கூடவே வருகிறார்.இப்படி உயர்ந்த அர்த்தம் சப்தபதி மந்திரத்திற்கு. இந்த சப்தபதி ஆனபின்னால் மணமகனும் மணமகளும் ஒருவர் கையை ஒருவர் விடாமல் அக்னியை வலம் வரவேண்டும். வந்து பட்டுப் பாயில் அமர வேண்டும். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். தர்பத்தை ஆசனமாகக் கொண்டு அதன்மீது அமர்ந்துதான் மந்திரங்களை உச்சரிக்கின்றோம். வெறும் தரையில் அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்கும்போது அந்த மந்திரங்கள் அதற்கான பலனைத் தருவதில்லை. தர்பை என்பது ஒரு புல்வகை. ஒரு மரப்பலகையின் மீதோ அல்லது கோரைப் புற்களால் பின்னப் பட்ட பாயின் மீதோ அமர்ந்துதான் வைதீகச் சடங்குகளை மேற்கொள்ள வேண்டும். வெறும் தரையில் அமர்ந்து செய் யப்படும் சடங்குகளால் பலன் இல்லை. செயற்கை இழையால் செய்யப்பட்ட பாய்களை ஆசனமாக பயன்படுத்தவும் கூடாது. அக்னியை வலம் வரும்போது தெற்குப் புறத்தில் பிரம்மாவிற்கு இடம் உண்டு. எனவே, வலம் வரும்பொழுது பிரம்மாவைச் சுற்றாமல் பிரம்மாவிற்கும் அக்னிக்கும் நடுவில் வலம் வர வேண்டும். இப்படி முடிந்த பின்னாலே செய்ய வேண்டிய அடுத்த காரியம் பிரதான ஹோமம். மனைவி வலது கையால் கணவனை தொட்டுக் கொண்டே இருக்க மணமகன் கீழே சொல்லப்படும் மந்திரங்களைச் சொல்லி பதினாறு ஹோமங்களைச் செய்ய வேண்டும்.பிரதான ஹோமங்கள் தேவதைகளின் மகிழ்ச்சிக்காக செய்யப்படுகின்றன. முதல் மந்திரம்
சோமாய ஜனிவிதே ஸ்வாஹா
இந்த பெண்ணை அடைந்தவனான சோமனுடைய மகிழ்ச்சிக்காக இந்த ஆகுதியைத் தருகி ன்றேன். நெர்யை சமர்ப்பிக்கின்றேன். அடுத்த மந்திரம்
கந்தர்வாய ஜனிவிதே ஸ்வாஹா
கந்தர்வனின் மகிழ்ச்சிக்காக இந்த நெய்யை சமர்ப்பிக்கின்றேன். அக்னயே ஸ்வாஹா அக்னியின் மகிழ்ச்சிக்காக நெய்யை அளிக்கின்றேன்.கன்யலா பித்ருப் யோயதீப ததிலோக மவ தீக்ஷாம தாஸ்த ஸ்வாஹா இவள் கன்னியாக இருந்தாள். தந்தை முதலிய உறவினர்களை விட்டுவிட்டு கணவன் வீட்டிற்குச் செ ல்கின்றாள். முன் இருந்த நிலையை விட்டுவிட்டு வேறொரு இடத்திற்கு வருவதாகப் பொருள். அதற்காக அக்னியில் இந்த ஹோமம் செய்கின்றேன்.இந்த நான்கு மந்திரங்களும் யஜுர் வேத மந்திரங்களாகும். இதற்குப் பின்னாலே பன்னிரண்டு ரிக் வேத மந்திரங்களால் ஹோமம் செய்யப்பட வேண்டும். அதிலே இந்திரன், வருணன் போன்ற தேவதைகளை வரவழைத்து அவர்களுக்கு கவுரவம் தரப்படுகின்றது. அந்த தேவர்களெல்லாம் மந்திரப் பூர்வமாக திருமண மேடைக்கு வந்திருக்கிறார்கள். வந்திருக்கும் தேவர்களையெல்லாம் தியானித்து அவர்களிடத்திலே பல்வேறு விதமான பிரார்த்தனைகளை வைப்பதைத்தான் இந்த மந்திரங்கள் குறிப்பிடுகின்றன. இதிலே நல்ல செல்வம் கேட்கப்படுகின்றது. குழந்தைகள் கேட்கப்படுகின்றன. சொத்து சுகங்கள் பிரார்த்திக்கப்படுகின்றன. தீர்க்க ஆயுள் பிரார்த்திக்கப்படுகின்றது. இந்தப் பிரதான ஹோமத்தால் திருப்தியடைந்த தேவர்கள் மணமக்களுக்கு பரிசாக அவர்கள் கேட்கும் வரங்களைத் தந்து விட்டு செல்வதினால் இந்த ஹோமங்கள் விடத்தக்கதல்ல. பாகவத சம்பிரதாயத்தில் எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியான பகவான் விளங்குவதால் பகவானுக்கே நேரடியாக ஆழ்வார்களின் பாசுரங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்தாலும் அதுவும் நலம்தான். இருந்தாலும் அதிகாரிகள் இருக்கின்றபொழுது வேத மந்திரங்களை சொல்வது சிலாக்கியமானது.
