திருநகரி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைப்பு

சீர்காழி, ஜன. 24:சீர்காழி பகுதியில் பெய்த தொடர் மழையால் திருநகரி ஊராட்சி தெற்குத்தெரு, பொன்னன் தெரு, வாய்க்காங்கரை தெரு, எடமணல் செல்லும் சாலைகள் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைதொடர்ந்து திருநகரி ஊராட்சி தலைவர் சுந்தரராஜன், சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக செங்கற்களை கொண்டு சீரமைத்தார். இந்நிலையில் சேதமடைந்த சாலைகளை நிரந்தரமாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>