டிரைவர் வீட்டில் 30 சவரன் திருட்டு

சென்னை: ராயப்பேட்டை கோயா அருணகிரி தெருவை சேர்ந்தவர் முகமது அப்துல்லா. கால் டாக்சி டிரைவரான இவர், ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 30 சவரன் நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் திருடுபோனது. புகாரின் பேரில் ஐஸ்ஹவுஸ் போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏலச்சீட்டு பணம் கட்டியவர்களை ஏமாற்ற நகை, பணம் திருடு போனதாக நாடகமாடுகிறாரா எனவும் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>