தூத்துக்குடி, டிச. 30:தூத்துக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் சீனு (26). பிரபல ரவுடியான இவர், கடந்த 25ம் தேதி இதே பகுதியில் உள்ள உப்பளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தியதில் சீனுவுக்கும், அவரது நெருங்கிய நண்பரான கபில்தேவ் தலைமையிலான கோஷ்டியினருக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து சீனுவின் கொலையில் தொடர்புடைய ஜேசுராஜ், ஆகாஷ், முகேஷ், மதியழகன், சக்திபாலா, நாராயணன் என்ற நவநீதன், அருள்ராஜ் மற்றும் 2 இளஞ்சிறார்கள் உள்பட 10 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்தக் கொலையில் தொடர்புடைய போலீசாரால் தேடப்பட்டு வந்த மேலும் 2 இளம்சிறாரை கைது செய்து, நெல்லை கூர்நோககு இல்லத்தில் சேர்த்தனர். சீனு கொலையில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
