நித்திரவிளை, டிச.30: கொல்லங்கோடு அருகே செங்கவிளை 4 வழி சாலை பகுதியில் கொல்லங்கோடு காவல் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே எம் சான்ட் ஏற்றிக் கொண்டு கேரளா நோக்கி வந்த லாரி ஒன்றை சோதனை செய்தார். அப்போது, முறையான ஆவணம் இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிப்பிரிவு ஏட்டு லாரியை பறிமுதல் செய்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த சஜு (32) என்பவரை கைது செய்தனர்.
