×

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம்

வாழப்பாடி, டிச.30: வாழப்பாடி வடக்கு ஒன்றிய திமுக சார்பில், அத்தனூர்பட்டி ஊராட்சியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. வாழப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். இதில், சேலம் கிழக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆத்தூர் சேகர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பழனிசாமி, அவைத்தலைவர் சோலை கோவிந்தன், இளைஞரணி அமைப்பாளர் சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரதி, தங்கராஜ், சிங்கிபுரம் கிளை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Victory Polling Station ,Vazhappadi ,Vazhappadi North Union DMK ,My Voter ,Victory Polling Station DMK ,Athanurpatti Panchayat ,Vazhappadi North Union ,Chakravarthy ,Salem East District Agriculture… ,
× RELATED ராபர்ட் புரூஸ் பூட் நினைவுநாள் அனுசரிப்பு