×

வங்கி முன் நிறுத்திய டூவீலரில் புகுந்த பாம்பு

கெங்கவல்லி, டிச.30: ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில், தனியார் வங்கி செயல் பட்டு வருகிறது. வங்கி மேலாளர் நாகராஜன், தனது டூவீலரை வங்கியின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, டூவீலரில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதை கண்டு அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் அசோகன் தலைமையில், வீரர்கள் விரைந்து வந்தனர். நீண்ட நேரமாக தேடியும் சிக்காததால், டூவீலரை தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நீண்ட நேர தேடுதலுக்கு பின், பதுங்கியிருந்த விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பை லாவகமாக மீட்டு, ஆத்தூர் வனச்சரகர் ரவி பெருமாளிடம் ஒப்படைத்தனர்.

Tags : Kengavalli ,Udayarpalayam ,Athur ,Nagarajan ,
× RELATED அனுமதியின்றி மண் அள்ளிய லாரி பறிமுதல்