தேனி, டிச.30: தேனி நகரின் முக்கிய சாலைகளாக தேனி நகர் பெரியகுளம் சாலையில், வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் சாலையோரம் வீசப்படும் குப்பைகளை கிளறி தின்று திரிகின்றன. இந்த மாடுகள் திடீரென சாலைகளில் ஓடும்போது, அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வரும் பயணிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம், சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் மாடுகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
