×

கீழடி, பொருநையை தொடர்ந்து தஞ்சையில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் : டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

சென்னை : கீழடி, பொருநையை தொடர்ந்து தஞ்சை மாநகரில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் தொல் பெருமையை பறைசாற்றும் விதமாக கீழடி, பொருநை அருங்காட்சியகம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனிடையே கீழடி, நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை என பொருநை அருங்காட்சியகத்திற்கு புகழாரம் சூட்டினாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த நிலையில், தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை ஆண்ட சோழப் பேரரசின் பங்களிப்பைப் போற்றவும், அக்கால கலைப்பொருட்களைப் பாதுகாக்கும் வகையில் தஞ்சை மாநகரில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.அதன்படி, உலகை ஆண்ட சோழர்களின் பங்களிப்பை எடுத்துரைக்கவும், அந்தக் காலத்து கலைப்பொருட்கள் மற்றும் எச்சங்களைப் பாதுகாக்கவும் ரூ.51 கோடியில் தஞ்சை மாநகரில் அமைக்கவும் தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

Tags : Keezhadi ,Porunai ,Chola ,Thanjavur ,Tamil Nadu government ,Chennai ,Keezhadi and Porunai Museum ,Tamils… ,
× RELATED இந்திய பெருங்கடலில் காற்றழுத்த...