×

பாஜக நிர்வாகி வீடு மீது சொந்த கட்சியினரே தாக்குதல் : 5 பேர் கைது!!

சென்னை : தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் பாஜக மாவட்ட செயலாளர் ஓம் சக்தி செல்வமணி மீது சக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஓம் சக்தி செல்வமணியின் செல்போனை பறித்த நிலையில் சொகுசு கார்களையும் உடைத்துவிட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வீடு, கார்களை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 5 பேரை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்ஐஆர் பணிக்காக பூத் ஏஜெண்ட்டுகளுக்கு கட்சி மேலிடம் தந்த பணத்தை பிரித்துக் கொள்வதில் பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

Tags : BJP ,Chennai ,Om Shakti Selvamani ,Varadarajapuram ,Thambaram ,Om Shakti ,
× RELATED தேர்தல் போட்டியில் சொந்த கட்சி...