×

தார் சாலையை சீரமைக்க கோரிக்கை

ஈரோடு, டிச. 27: ஈரோடு, அருகே உள்ளது வள்ளிபுரத்தான்பாளையம், இப்பகுதியில் ஏராளமான வீடுகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன. இந்த வழியாக சென்னிமலை ரோடு, முத்தம்பாளையம் செல்லலாம். இதில், தினமும் நூற்றுக்கணக்கில் அனைத்து ரக வாகனங்களும் சென்று வருகின்றன.

இந்த சாலை சிதிலமடைந்து, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த தார் சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Erode ,Vallipurathanpalayam ,Chennimalai Road ,Muthampalayam ,
× RELATED வாய்க்கால் பாலத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை