ஜலகண்டாபுரம், டிச. 27: ஜலகண்டாபுரத்தை அடுத்த ஆவடத்தூர் கிராமம், ராஜாகோவில் வளவு பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அப்பகுதியில் இருந்து, நேற்று அதிகாலை உரிய அனுமதியின்றி டிப்பர் லாரி மூலம் சரளை மண் அள்ளப்படுவதாக, நங்கவள்ளி வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு ஆவடத்தூர் விஏஓ மற்றும் உதவியாளருடன் சென்று பார்த்தபோது, லாரியை கொண்டு சரளை மண் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அதிகாரிகளை கண்டதும் லாரி டிரைவர் லாரியை அங்கேயே விட்டிவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார். லாரியை பறிமுதல் செய்த வருவாய் ஆய்வாளர், இது குறித்து ஜலகண்டாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், தலைமறைவான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
